Friday 17th of May 2024 04:01:19 AM GMT

LANGUAGE - TAMIL
-
இத்தாலியில்  ஈஸ்டர் சமூக முடக்கல்;  3  நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் அமுல்!

இத்தாலியில் ஈஸ்டர் சமூக முடக்கல்; 3 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் அமுல்!


ஈஸ்டர் பண்டிகையையொட்டி அதிகளவானவர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் நோக்கில் 3 நாட்கள் கடுமையாக சமூக முடக்கல் இத்தாலியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் அனைத்து பிராந்தியங்களும் கடும் கட்டுப்பாடுகளுடன் இப்போது சிவப்பு மண்டல எச்சரிக்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இத்தாலி தற்போது தொற்று நோயின் மூன்றாவது அலையுடன் போராடி வருகிறது. தினசரி தொற்று நோயாளர் தொகை அங்கு 20,000 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு அங்கு புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன.

புதிய கட்டுப்பாடுகளின் கீழ் அத்தியாவசியமற்ற நடமாட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. தேவாலயங்களும் திறந்திருந்தாலும் தங்கள் சொந்த இடங்களில் உள்ள தேவாலய வழிபாடுகளில் மட்டும் சுகாதார வழிகாட்டல்களை பேணி நடந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோவிட்19 தொற்று நோய் நெருக்கடி காரணமாக இவ்வாண்டு இரண்டாவது தடவையாகவும் ஆட்கள் அற்ற சென்.பீற்றர் சதுக்கத்தில் இருந்து போப் பிரான்சிஸ் ஆசி வழங்குவார்.

இத்தாலியில் இதுவரை மொத்தம் 110,328 -க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அத்துடன், 36 இலட்சத்து 29 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE